Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ உணவு பாதுகாப்பு துறை சார்பில் பயிற்சி

உணவு பாதுகாப்பு துறை சார்பில் பயிற்சி

உணவு பாதுகாப்பு துறை சார்பில் பயிற்சி

உணவு பாதுகாப்பு துறை சார்பில் பயிற்சி

ADDED : ஜூலை 04, 2025 01:41 AM


Google News
திருச்செங்கோடு. தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மற்றும் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் அலுவலர்கள் இணைந்து, உணவு உற்பத்தியில் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை என்ற தலைப்பில் சிறப்பு பயிற்சி நிகழ்ச்சி திருச்செங்கோடு தனியார் கல்லுாரியில் நேற்று நடந்தது.

நாமக்கல் மாவட்ட வன அலுவலர் மாதவி யாதவ் தலைமை வகித்தார். மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் வரவேற்றார். தனியார் பொறியியல் கல்லுாரி உணவு தொழில்நுட்ப துறை தலைவர் ராபின்சன் தொழில்நுட்ப விளக்கம் அளித்தார். இயற்கை விவசாயி உழவர்ஆனந்த் பாரம்பரிய பயிர்கள் அவசியம் குறித்து பேசினார்.

உணவு பொருள்களில் உள்ள கலப்படங்களை எளிய முறையில் கண்டறிதல், துரித உணவு பழக்கமும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி, உணவு பாதுகாப்பு அலுவலர்கள் விளக்கினர். செய்தித்தாள்களில் உணவு பொருட்களை மடித்தல் அல்லது பரிமாற்றம் செய்வதால், அதிலுள்ள வேதியியல் கலப்புகள் உணவுடன் கலந்து பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் தவிர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. உணவு விடுதி மற்றும் ரெஸ்டாரன்ட் உரிமையாளர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us