/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பட்டுப்போன தென்னை மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு பட்டுப்போன தென்னை மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
பட்டுப்போன தென்னை மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
பட்டுப்போன தென்னை மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
பட்டுப்போன தென்னை மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : செப் 17, 2025 02:10 AM
குளித்தலை :குளித்தலையில், பட்டுப்போன தென்னை மரம் முறிந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.குளித்தலை, ஏ.சி.டி. நகர் தனியார் பைக் ேஷாரூம் எதிரில், திருச்சி--கரூர் மாநில நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த, பட்டுப்போன தென்னை மரம் நேற்று மதியம் 3:30 மணியளவில் முறிந்து, மின்கம்பத்தின் ஒயர் மேல் சாய்ந்து நெடுஞ்சாலையில் விழுந்தது.
இதனால் இச்சாலையில் அரசு, தனியார் பஸ்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள், உடனடியாக மின்சார இணைப்பை துண்டித்தனர். நெடுஞ்சாலை துறை ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் முறிந்து விழுந்த மரத்தை அகற்றினர். இதனால் அப்பகுதியில், சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.மின் இணைப்பு உடனடியாக துண்டிக்கப்பட்டதால், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.