/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வேலாயுதம்பாளையம் அருகே மணல் கடத்திய மூவர் தப்பியோட்டம் வேலாயுதம்பாளையம் அருகே மணல் கடத்திய மூவர் தப்பியோட்டம்
வேலாயுதம்பாளையம் அருகே மணல் கடத்திய மூவர் தப்பியோட்டம்
வேலாயுதம்பாளையம் அருகே மணல் கடத்திய மூவர் தப்பியோட்டம்
வேலாயுதம்பாளையம் அருகே மணல் கடத்திய மூவர் தப்பியோட்டம்
ADDED : மே 27, 2025 01:32 AM
கரூர், வேலாயுதம்பாளையம் அருகே, மணல் கடத்தி விட்டு, தப்பியோடிய மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ் உள்ளிட்ட போலீசார் நேற்று முன்தினம், கரூர் - சேலம் தேசிய நெடுஞ்சாலை தளவாப்பாளையம் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக மணல் கடத்திய வாகனங்களை தடுத்து போலீசார் நிறுத்தினர். இதனால் மினி வேன், டிப்பர் லாரி மற்றும் டூவீலரை போட்டு விட்டு, மூன்று பேர் தப்பி விட்டனர். இது
குறித்து, வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.