/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் அருகே கஞ்சா வைத்திருந்த மூவர் கைது கரூர் அருகே கஞ்சா வைத்திருந்த மூவர் கைது
கரூர் அருகே கஞ்சா வைத்திருந்த மூவர் கைது
கரூர் அருகே கஞ்சா வைத்திருந்த மூவர் கைது
கரூர் அருகே கஞ்சா வைத்திருந்த மூவர் கைது
ADDED : ஜூன் 22, 2025 01:08 AM
கரூர், வெங்கமேடு, தான்தோன்றிமலையில் கஞ்சா வைத்திருந்ததாக, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், வெங்கமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துசாமி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் வெங்கமேடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 2.100 கிலோ கிராம் கஞ்சா வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த மனோஜ், 25; ஜோகிதர், 24; ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிட மிருந்து, 500 ரூபாய் மற்றும் யமஹா டூவீலரை, வெங்கமேடு போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதேபோல், தான்தோன்றிமலை ராயனுார் பகுதியில், 50 கிராம் கஞ்சா வைத்து கொண்டு, நின்றிருந்த இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த ஜீவானந்தம், 45; என்பவரை தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.