/உள்ளூர் செய்திகள்/கரூர்/ராமர் பாண்டி கொலை வழக்கில் மூவருக்கு குண்டாஸ்ராமர் பாண்டி கொலை வழக்கில் மூவருக்கு குண்டாஸ்
ராமர் பாண்டி கொலை வழக்கில் மூவருக்கு குண்டாஸ்
ராமர் பாண்டி கொலை வழக்கில் மூவருக்கு குண்டாஸ்
ராமர் பாண்டி கொலை வழக்கில் மூவருக்கு குண்டாஸ்
ADDED : ஜூன் 07, 2024 12:03 AM
கரூர் : கரூர் அருகே நடந்த, ராமர் பாண்டி கொலை வழக்கில் மேலும், மூவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரை மாவட்டம், அனுப்பனாடி பகுதியை சேர்ந்தவர் ராமர் பாண்டி, 37. இவர் கடந்த பிப்., 19ல், கரூர் நீதிமன்றத்தில் கொலை வழக்கு தொடர்பாக ஆஜராகி விட்டு, மதுரைக்கு டூவீலரில் சென்றார். அப்போது, ராமர் பாண்டியை காரில் பின் தொடர்ந்த மர்ம கும்பல் அவரை, அரவக்குறிச்சி அருகே தேரப்பாடி பகுதியில் சென்ற போது, அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இந்த கொலை வழக்கு தொடர்பாக அரவக்குறிச்சி போலீசார், மதுரை மாவட்டத்தை சேர்ந்த காமேஷ்வரன், 29, சுந்தரபாண்டி, 29, சோலை ஈஸ்வரன், 28, ஆகியோரை கைது செய்தனர். கரூர் எஸ்.பி., பிரபாகரின் பரிந்துரையை ஏற்று, நேற்று மூன்று பேரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டார். இந்த வழக்கில் ஏற்கனவே, எட்டு பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.