Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 33 ஆண்டுக்கு பின் திருத்தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்தனர்்

33 ஆண்டுக்கு பின் திருத்தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்தனர்்

33 ஆண்டுக்கு பின் திருத்தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்தனர்்

33 ஆண்டுக்கு பின் திருத்தேரோட்டம் ஆயிரக்கணக்கானோர் வடம் பிடித்தனர்்

ADDED : மே 12, 2025 03:10 AM


Google News
குளித்தலை: குளித்தலை அடுத்த, ராசாண்டார் திருமலையில், 33 ஆண்டுக-ளுக்கு பின்பு விரையாச்சிலை ஈஸ்வரர் மலைக்கோவிலில், பெரியநாயகி அம்பாள்

உடனுறை விரையாச்சிலை ஈஸ்வரர் பிரம்ம ரத உற்சவம் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது.

கோவில் குடிபாட்டுக்காரர்கள், மண்டக படிதாரர்களுக்கு பாத்தி-யப்பட்ட கோவில் தேவஸ்தானத்தில் கடந்த, 33 ஆண்டுகளுக்கு மேலாக திருவிழா நடைபெறாமல் இருந்தது. பத்து நாட்கள் பெரிய தேர் திருவிழா நடத்துவதற்கு, முன்னாள் பரம்பரை அறங்-காவலர் பொன்னம்பலம் தலைமையில் கோவில் தக்கார் மற்றும் செயல் அலுவலர் சந்திரசேகர், மண்டகப்படிதாரர்கள் மற்றும் குடிபாட்டுக்

காரர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து கோவில் முன் இருந்த, 627 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்களால் உருவாக்கப்பட்ட பழமையான பெரிய தேர் பழுதடைந்து இருந்தது. ரூ.67 லட்சம் மதிப்பில் திருச்சி பி.ஹெச்.இ.எல்., (பெல்) நிறுவனம் சார்பில், இரும்பு அச்சுகள் மற்றும் இரும்பு சக்கரங்கள் உருவாக்கப்பட்டு கடந்த நான்கு ஆண்டுகளாக, 16 அடி 3 அங்குலம் உயரத்தில் 427 தெய்வீக சிற்-பங்

களுடன் அமைக்கப்பட்டது.

கடந்த மாதம், 30ல் தேர் வெள்ளோட்டம் நடந்தது. கடந்த, 3ல் முன்னாள் பரம்பரை அறங்காவலர் பொன்னம்பலம் தலை-மையில் கொடியேற்று விழா நடந்தது. அன்று நாட்டார்கள் மற்றும்

நாயக்கர்கள் மண்டகப்படி உபயதாரத்தில், பஞ்சமூர்த்தி சுவா-மிகள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி புறப்பாடு நடந்தது.

நேற்று பெரியநாயகி அம்மாள் உடனுறை விரையாச்சிலை ஈஸ்-வரர், பெரிய தேர் பிரம்ம ரத உற்சவத்தில் பக்தர்களுக்கு காட்சிய-ளித்தார். ஆயிரக்கணக்கானோர் தேரை வடம் பிடித்து இழுத்-தனர். மதியம் 2:00 மணியளவில் தேர் நிலைக்கு வந்தது. பக்-தர்கள் தேங்காய்களை உடைத்து சிறப்பு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டனர்.

குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் திருச்சி. அரியலுார், பெரம்பலுார் மாவட்டத்தை சேர்ந்த 200க்கும் மேற்-பட்ட போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us