/உள்ளூர் செய்திகள்/கரூர்/காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் வர்ணம் தீட்டும் பணி மும்முரம்காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் வர்ணம் தீட்டும் பணி மும்முரம்
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் வர்ணம் தீட்டும் பணி மும்முரம்
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் வர்ணம் தீட்டும் பணி மும்முரம்
காளிப்பட்டி கந்தசாமி கோவிலில் வர்ணம் தீட்டும் பணி மும்முரம்
ADDED : ஜன 04, 2024 11:24 AM
மல்லசமுத்திரம்: சேலம் - நாமக்கல் மாவட்ட எல்லைப்பகுதியில், 300 ஆண்டு பழமையான காளிப்பட்டி கந்தசாமி கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் ஆண்டுதோறும், தைப்பூச தேர்த்திருவிழா கோலாகலமாக நடக்கும். கிட்டத்தட்ட ஒருமாதத்திற்கும் அதிகமாக பக்தர்கள் கூட்டம் காணப்படும். தமிழகத்தின் பல்வேறு மாவடங்களில் இருந்து பக்தர்கள் வந்து
செல்வர்.
வரும் சித்திரை மாதம், கும்பாபிஷேகம் நடத்த முடிவுசெய்யப்பட்டு, கடந்த டிச., 15ல் பாலாலயம் நடந்தது. தைப்பூச தேரோட்ட விழா மற்றும் அதை தொடர்ந்து, சித்திரையில் கும்பாபிஷேக விழா நடக்க இருப்பதால், பரம்பரை அறங்காவலர் பூஜாரி சந்திரலேகா மற்றும் செயல்அலுவலர் மணிகண்டன் தலைமையில், கோவில் கோபுரம் மற்றும் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.