/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சேதமடைந்த நிலையில் வாரச்சந்தை கட்டடம் சேதமடைந்த நிலையில் வாரச்சந்தை கட்டடம்
சேதமடைந்த நிலையில் வாரச்சந்தை கட்டடம்
சேதமடைந்த நிலையில் வாரச்சந்தை கட்டடம்
சேதமடைந்த நிலையில் வாரச்சந்தை கட்டடம்
ADDED : ஜூலை 01, 2025 01:04 AM
கரூர், மாயனுார் வாரச்சந்தையில், கட்டடங்களை சீரமைக்க வேண்டும் என, வியாபாரிகள் எதிர்பார்க்கின்றனர்.
மாயனுாரில் வாரந்தோறும் திங்கள்கிழமை வாரச்சந்தை கூடுகிறது. அதில், கரூர் மாவட்டம் மட்டுமின்றி திருச்சி, நாமக்கல் மற்றும் திண்டுக்கல்லை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள், பொருட்களை விற்பனை செய்ய வருகின்றனர்.
மாயனுார் ரயில்வே ஸ்டேஷனுக்கு அருகே, வாரச்சந்தை கூடுவதால் ஏராளமான பொது மக்களும் சந்தைக்கு வருகின்றனர். இந்நிலையில், சந்தை பகுதியில் உள்ள கட்டடங்கள் சேதமடைந்த நிலையில் உள்ளது.
இதனால், மழைக்காலங்களில் வியாபாரிகள், பொதுமக்கள் ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கின்றனர். மேலும், சந்தை கூடும் இடத்தில் உள்ள கழிப்பிடங்களும் சேதமடைந்து, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
எனவே, மாயனுார் வாரச்சந்தை கூடும் இடங்களில் உள்ள, சேதமடைந்த கட்டடங்கள் மற்றும் கழிப்பிடங்களை சீரமைக்க பஞ்., நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்