/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கோவிலுக்கு இடையூறாக இருந்த மின் கம்பிகள் மாற்றி அமைப்பு கோவிலுக்கு இடையூறாக இருந்த மின் கம்பிகள் மாற்றி அமைப்பு
கோவிலுக்கு இடையூறாக இருந்த மின் கம்பிகள் மாற்றி அமைப்பு
கோவிலுக்கு இடையூறாக இருந்த மின் கம்பிகள் மாற்றி அமைப்பு
கோவிலுக்கு இடையூறாக இருந்த மின் கம்பிகள் மாற்றி அமைப்பு
ADDED : ஜூன் 13, 2025 01:40 AM
அரவக்குறிச்சி, குமாரண்டன்வலசு பகுதியில், கோவில் கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்த, உயர் மின் அழுத்த மின் கம்பியை மாற்றி அமைத்து கொடுத்த, முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.எல்.ஏ.,வுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
அரவக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட, 15 வது வார்டு பகுதியில் குமாரண்டன்வலசு கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியில் பட்டாளம்மன், காளியம்மன், விநாயகர், மந்தை முனியப்பன் கோவில் ஆலய கட்டுமான பணி நடந்து வந்தது. கட்டுமான பணிக்கு இடையூறாக, உயர் அழுத்த மின் கம்பி கோவில் மேல் தளத்தில் சென்றது.
இதனால் கட்டுமான பணி தாமதமானது. உயர்மின் அழுத்த மின்கம்பியை, மாற்றி அமைத்து தர வேண்டும் என, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ ஆகியோரிடம் இப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இப்பகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று, கட்டுமான பணிக்கு இடையூறாக இருந்த உயர் மின்னழுத்த மின்கம்பியை, மாற்றி அமைத்து கொடுத்துள்ளனர். இதற்காக பொதுமக்ள் நன்றி தெரிவித்தனர்.