சாக்கடை கால்வாயை தூர் வார வேண்டும்
சாக்கடை கால்வாயை தூர் வார வேண்டும்
சாக்கடை கால்வாயை தூர் வார வேண்டும்
ADDED : ஜன 06, 2024 10:47 AM
கரூர்: கரூர் அருகே, வாங்கல் அக்ரஹாரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஆயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.
ஆனால், அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சாக்கடை கழிவு நீர் வாய்க்கால், பல மாதங்களாக துார்வாரப்படவில்லை. இதனால், கழிவுநீர் தேங்கிய நிலையில் உள்ளது. அதில், துர்நாற்றமும்,கொசு உற்பத்தியும் அதிகரித்துள்ளது.
மழைக்காலங்களில் கழிவுநீருடன் சேர்ந்து, மழைநீரும் சாலையில் செல்கிறது. தொற்று நோய் ஏற்படும் முன், சாக்கடை கால்வாயை துார் வார, வாங்கல் பஞ்சாயத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.