குண்டும், குழியுமான கரூர்-ஈரோடு சாலை
குண்டும், குழியுமான கரூர்-ஈரோடு சாலை
குண்டும், குழியுமான கரூர்-ஈரோடு சாலை
ADDED : செப் 01, 2025 04:19 AM
கரூர்: கரூர்,- திருக்காம்புலியூர் ரவுண்டானா அருகில் கோவை, ஈரோடு பிரிவு சாலை செல்கிறது. இந்த சாலை வழியாக தினமும், 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதில், ஈரோடு பிரிவு சாலையில் சாலை சேதமடைந்து குண்டும், குழியு-மாக காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்படு-கின்றனர். கரூர்--ஈரோடு சாலையில் தனியார், அரசு பள்ளிகள், ஓட்-டல்கள், டீ கடைகள், வங்கி மற்றும் ஏராளமான வர்த்தக நிறுவ-னங்கள் உள்ளன. இதனால், ஈரோடு சாலை பிரிவு முனியப்பன் கோவில் பகுதியில், போக்குவரத்து சீராக செல்ல வேகத்தடைகள் அமைக்கப்பட்டது.
தற்போது, வேகத்தடையை யொட்டியுள்ள சாலை சேதமடைந்-துள்ளது. அதை, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் கரூர் போக்குவரத்து போலீசார் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் சிறிய அளவிலான விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே, கரூர்--ஈரோடு சாலை முனியப்பன் கோவில் அருகே, வேகத்தடை பகுதியில், சேதமடைந்த சாலையை, உடனடியாக சரி செய்ய நட-வடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.