/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு அழைப்பு மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு அழைப்பு
மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு அழைப்பு
மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு அழைப்பு
மாவு அரைக்கும் இயந்திரம் வாங்க மானியம் கைம்பெண்கள், ஆதரவற்றோருக்கு அழைப்பு
ADDED : ஜூன் 23, 2025 05:48 AM
கரூர்: 'கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்களுக்கு, மாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரம் வாங்க மானியம் வழங்கப்படுகி-றது' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்ட சமூகநல அலுவலகம் சார்பில், சமூகத்தில் பின்-தங்கிய பிரிவினரான கைம்பெண்கள், ஆதரவற்றோர், கணவனால் கைவிடப்பட்டோருக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்-ளது. மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், 10,000 ரூபாய்- அல்லது அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள உலர் மற்றும் ஈரமாவு அரைக்கும் வணிக ரீதியிலான இயந்திரம் வாங்-கும்போது, மொத்த விலையில், 50 சதவீதம் அல்லது அதிக-பட்சம், 5,000 ரூபாய்- மானிய தொகையாக வழங்கப்படும்.
இதற்கு, தமிழகத்தில் பூர்வீகமாக வசிப்பவராக இருக்க வேண்டும். 25 வயதிற்கு மேல் இருத்தல் வேண்டும். திட்டத்தில் முன்னுரிமை பெற வேண்டுமானால் கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள் அல்லது கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் என்ப-தற்கான சான்று சமர்ப்பிக்க வேண்டும். ஆண்டு வருமான வரம்பு, 1.20 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருத்தல் வேண்டும். விண்-ணப்பங்களை, ஜூலை, 14க்குள், மாவட்ட சமூகநல அலுவ-லகம், மாவட்ட கலெக்டர் வளாகம், கரூர் என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.