/உள்ளூர் செய்திகள்/கரூர்/ விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு உற்சாகத்துடன் வந்த மாணவர்கள் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்
விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்
விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்
விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு உற்சாகத்துடன் வந்த மாணவர்கள்
ADDED : ஜூன் 03, 2025 01:02 AM
கரூர்,கோடை விடுமுறை முடிந்து, பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகத்துடன் வந்தனர்.
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 முதல் ஏப்., 15 வரை நடத்தப்பட்டது. 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்., 7 முதல் 17- வரையும், 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்., 8 முதல் 24- வரையும் ஆண்டு இறுதி தேர்வு நடந்தது. பின், ஏப்., 25 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. கோடை விடுமுறை முடிந்து, கரூர் உள்பட தமிழகம் முழுவதும் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கோடை விடுமுறையில் சந்தோஷமாக இருந்த மாணவ, -மாணவியர், நேற்று காலை பள்ளி வாசலை தொட்டதுமே பரவசமடைந்தனர்.
தங்களது நண்பர்களை பார்த்து ஆனந்தம் அடைந்தனர். ஆசிரியர்களை பார்த்து நலம் விசாரித்தனர்.
புதிய கல்வியாண்டை தொடங்கும் உற்சாகத்துடன் வகுப்புகளுக்குள் நுழைந்தனர். பள்ளிகளிலும், புதிய மாணவர்களை வரவேற்கும் வகையில், நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.
பள்ளிகள் திறந்த முதல் நாளிலேயே, அரசு பள்ளி மாணவ-, மாணவியருக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் பணி துவங்கியது. வழக்கமாக கோடை வெப்பத்தின் தாக்கம் இருக்கும். பள்ளிகள் திறப்பு சற்று தள்ளிப்போகும். இந்தாண்டு அதற்கான சூழல் அமையவில்லை. திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.