/உள்ளூர் செய்திகள்/கரூர்/புகையில்லா போகி குறித்து மாணவர்கள் விழிப்புணர்வுபுகையில்லா போகி குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு
புகையில்லா போகி குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு
புகையில்லா போகி குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு
புகையில்லா போகி குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு
ADDED : ஜன 13, 2024 03:55 AM
கிருஷ்ணராயபுரம்,: கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில், புகையில்லா போகி குறித்து விழிப்புணர்வு பேரணி, கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்சாயத்து முக்கிய வீதிகளின் வழியாக சென்றது.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மற்றும் டவுன் பஞ்சாயத்து நிர்வாகம் இணைந்து, பொது மக்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது புகையில்லா போகி குறித்தும், துாய்மை இந்தியா திட்டம்-2.0 விழிப்புணர்வு குறித்தும் பேரணி நடந்தது.புகையில்லாக போகி, காற்று மாசு குறைத்தல் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு செய்தபடி மாணவர்கள் சென்றனர்.
இறுதியில் பேரணி பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது.இதில் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், டவுன் பஞ்சாயத்து அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.