/உள்ளூர் செய்திகள்/கரூர்/வீட்டு மாடியில் இருந்து விழுந்த மாணவி சாவுவீட்டு மாடியில் இருந்து விழுந்த மாணவி சாவு
வீட்டு மாடியில் இருந்து விழுந்த மாணவி சாவு
வீட்டு மாடியில் இருந்து விழுந்த மாணவி சாவு
வீட்டு மாடியில் இருந்து விழுந்த மாணவி சாவு
ADDED : ஜூன் 11, 2025 02:28 AM
ஈரோடு, மொடக்குறிச்சி, சோலார் புதுார், எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. தறி பட்டறை மேஸ்திரி. இவர் மனைவி பானு பிரியா. இவர்களின் மகள் கோகிலவாணி, 12; அரசுப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி.
கடந்த, 8ம் தேதி மாலை வீட்டு மொட்டை மாடியில் விளையாடினார். தடுப்பு சுவர் இல்லாத மாடியில் இருந்து விழுந்ததில் தலை, உடம்பில் பலத்த காயமடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று காலை இறந்தார். மொடக்குறிச்சி போலீசார் விசாரிக்கின்றனர்.