/உள்ளூர் செய்திகள்/கரூர்/இன்று காலை உணவு திட்டம் தொடக்கம்: கலெக்டர் பங்கேற்புஇன்று காலை உணவு திட்டம் தொடக்கம்: கலெக்டர் பங்கேற்பு
இன்று காலை உணவு திட்டம் தொடக்கம்: கலெக்டர் பங்கேற்பு
இன்று காலை உணவு திட்டம் தொடக்கம்: கலெக்டர் பங்கேற்பு
இன்று காலை உணவு திட்டம் தொடக்கம்: கலெக்டர் பங்கேற்பு
ADDED : ஜூலை 15, 2024 01:01 AM
கரூர்: கரூர் அருகே, அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில், காலை உணவு வழங்கும் திட்ட தொடக்க விழா, இன்று நடக்கி-றது.திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் பஞ்., கீழச்சேரி அரசு உதவி பெறும் புனித அன்னாள் தொடக்கப்பள்ளியில், இன்று காலை, காலை உணவு வழங்கும், திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
அதை தொடர்ந்து, கரூர் மாவட்டம் நெரூரில் உள்ள புனித மரியன்னை அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில், இன்று காலை, 8:00 மணிக்கு கலெக்டர் தங்கவேல், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அதில், எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர்.