/உள்ளூர் செய்திகள்/கரூர்/ குளித்தலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் குளித்தலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
குளித்தலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
குளித்தலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
குளித்தலையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
ADDED : செப் 21, 2025 01:13 AM
குளித்தலை, குளித்தலை அடுத்த மருதுார் டவுன் பஞ்., அலுவலகம் முன், உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது,
செயல் அலுவலர் காந்தரூபன் தலைமை வகித்தார். துணை தாசில் தார் நீதிராஜன், டவுன் பஞ்., தலைவர் சகுந்தலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொது மக் களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, குளித்தலை தி.மு.க., எம்.எல்.ஏ., மாணிக்கம் மனுக்களை பெற்றார். சப் - கலெக்டர் சுவாதிஸ்ரீ முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் மகளிர் உரிமைத் தொகை, மாற் றுத்திறனாளிக்கான நலத் துறை, ஆதி திராவிட மற்றும் பழங்குடியின நலத்துறை, சிறு குறு மற் றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, வருவாய் மற்றும் பேரி டர் மேலாண்மை துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்கள் தங்களது மனுக்களை, அதிகாரிகளிடம் பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற்றனர்.
இதேபோல் நகராட்சி சார்பில், அண்ணா திருமண மண்டபத்திலும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடந்தது. தாசில்தார் இந்துமதி, நகராட்சி தலைவர் சகுந்தலா, கமிஷனர் நந்தகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மக்களிடம் இருந்து எம்.எல்.ஏ., மாணிக்கம் மனுக்களை பெற்றார். முன்னாள் நகராட்சி தலைவர் பல்லவிராஜா, பொறியாளர் கார்த்தி கேயன், தனி தாசில்தார் மதியழகன் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.