/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கிருஷ்ணராயபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி கிருஷ்ணராயபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி
கிருஷ்ணராயபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி
கிருஷ்ணராயபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி
கிருஷ்ணராயபுரம் பகுதியில் சின்ன வெங்காயம் சாகுபடி
ADDED : மே 29, 2025 01:46 AM
கிருஷ்ணராயபுரம் ;கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம், வயலுார், சரவணபுரம், பாம்பன்பட்டி, நடுப்பட்டி, அந்தரப்பட்டி, கணக்கம்பட்டி, மத்திப்பட்டி, தேசிய மங்களம், மலையாண்டிப்பட்டி ஆகிய பகுதிகளில் சின்ன வெங்காயம் சாகுபடி நடந்து வருகிறது. சாகுபடிக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
தற்போது உழவு பணி நடந்து முடிந்துள்ள நிலையில் சின்ன வெங்காயம் நடவு பணி துரிதமாக நடக்கிறது. இந்த பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். குறைந்த நாட்களில் வருமானம் தரக்கூடியதாக சின்ன வெங்காயம் உள்ளது. தற்போது சின்ன வெங்காயம் கிலோ, 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.