/உள்ளூர் செய்திகள்/கரூர்/இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிஇளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
ADDED : ஜூன் 07, 2024 12:04 AM
கரூர் : ஜவுளித்துறையில் வேலையில்லாத இளைஞர்களுக்கு, திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கை: தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சிக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 முடித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ஸ்பின்னிங் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. மேற்படி பயிற்சி பெற விரும்புபவர்கள் https://tntextiles.tn.gov.in./jobs/ என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு மண்டல துணை இயக்குனர், துணிநுால்துறை, கரூர் அலுவலகத்தை அல்லது 04324- 299 544 தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு கூறியுள்ளார்.