/உள்ளூர் செய்திகள்/கரூர்/கிடப்பில் கழிவுநீர் வாய்க்கால் பணி; வாகன ஓட்டிகள் பாடு திண்டாட்டம்கிடப்பில் கழிவுநீர் வாய்க்கால் பணி; வாகன ஓட்டிகள் பாடு திண்டாட்டம்
கிடப்பில் கழிவுநீர் வாய்க்கால் பணி; வாகன ஓட்டிகள் பாடு திண்டாட்டம்
கிடப்பில் கழிவுநீர் வாய்க்கால் பணி; வாகன ஓட்டிகள் பாடு திண்டாட்டம்
கிடப்பில் கழிவுநீர் வாய்க்கால் பணி; வாகன ஓட்டிகள் பாடு திண்டாட்டம்
ADDED : ஜூலை 15, 2024 01:01 AM
கரூர்: கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில், கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணிகள் கிடப்பில் உள்ளது. இதனால், வாகன ஓட்-டிகள் திண்டாடி வருகின்றனர்.
கரூர் தினசரி காமராஜ் மார்க்கெட் எதிரே, ரயில்வே ஸ்டேஷன் சாலையின் குறுக்கே, கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் வகையில், சில நாட்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால், பணி-களை குறிப்பிட்ட நேரத்தில் நிறைவு செய்யாமல், ஒப்பந்த ஊழி-யர்கள் கிடப்பில் போட்டுள்ளனர். இந்த சாலை வழியாக அரசு, தனியார் பஸ்கள், ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று வந்தன. தற்-போது, பள்ளம் தோண்டப்பட்டுள்ளதால், கரூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு, பஸ்கள் பூ மார்க்கெட் வழியாக செல்கின்றன.
இதனால், பூ மார்க்கெட் பகுதியில், நாள்தோறும் கடும் போக்கு-வரத்து நெரிசல் ஏற்படுகிறது. அப்போது, கரூர் நகரில் இருந்து வாங்கல், பசுபதிபாளையம், தொழிற்பேட்டை, நெரூர் பகுதிக-ளுக்கும் செல்லும் வாகனங்களும், போக்குவரத்து நெரிசலில் சிக்-குவதால், வாகன ஓட்டிகள் படும் திண்டாட்டத்துக்கு உள்ளாகின்-றனர். எனவே, கரூர் ரயில்வே ஸ்டேஷன் சாலையில், கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியை விரைவாக முடிக்க, கரூர் மாநக-ராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.