/உள்ளூர் செய்திகள்/கரூர்/அம்மன் நகரில் சாக்கடை வடிகால் வசதி தேவைஅம்மன் நகரில் சாக்கடை வடிகால் வசதி தேவை
அம்மன் நகரில் சாக்கடை வடிகால் வசதி தேவை
அம்மன் நகரில் சாக்கடை வடிகால் வசதி தேவை
அம்மன் நகரில் சாக்கடை வடிகால் வசதி தேவை
ADDED : ஜன 08, 2025 06:45 AM
கரூர்: கரூர் மாநகராட்சிக்குட்பட்ட, கொளந்தானுார் அம்மன் நகர் பகுதியில் சாக்கடை வடிகால் அமைக்க வேண்டும்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பசுபதிபாளையம், கொளந்தானுார் பகுதியில் இருந்து, அரசு மருத்துவ கல்லுாரிக்கு செல்லும் பாதையில் அம்மன் நகர் உள்ளது. நுாற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. மாநகராட்சிக்குட்பட்ட மையப்பகுதியில் உள்ள அம்மன் நகரில், இதுநாள் வரை சாக்கடை வடிகால் வசதி செய்து தரப்படவில்லை. இதனால், வீடுகளில் இருந்து சாலையிலேயே கழிவுநீர் வெளியேற்றப்படும் அவல நிலை நீடிக்கிறது. மழை காலத்தில், கழிவுநீருடன் மழை நீர் கலந்து தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால், டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய் உருவாகிறது. எனவே, இந்த பகுதியில் சாக்கடை வடிகால் செய்து தர வேண்டும் என, இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.