/உள்ளூர் செய்திகள்/கரூர்/ரயில்வே பாலத்தின் கீழ் கழிவு நீர்; விபத்தில் சிக்கும் ஓட்டுனர்கள்ரயில்வே பாலத்தின் கீழ் கழிவு நீர்; விபத்தில் சிக்கும் ஓட்டுனர்கள்
ரயில்வே பாலத்தின் கீழ் கழிவு நீர்; விபத்தில் சிக்கும் ஓட்டுனர்கள்
ரயில்வே பாலத்தின் கீழ் கழிவு நீர்; விபத்தில் சிக்கும் ஓட்டுனர்கள்
ரயில்வே பாலத்தின் கீழ் கழிவு நீர்; விபத்தில் சிக்கும் ஓட்டுனர்கள்
ADDED : ஜூலை 09, 2024 05:44 AM
கரூர்: கரூர் ஐந்து ரோடு ரயில்வே பாலத்தின் கீழ், முறையாக வடிகால் வசதி இல்லாததால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கரூர் ஐந்து ரோடு வழியாக, நெரூர், வாங்கல் பகுதிகளுக்கு பஸ் உள்பட தினமும், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.ஆனால், இப்பகுதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால், மழைநீர், ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் நீண்ட நாட்களாக தேங்கி நிற்கிறது.ஐந்து சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது மழை பெய்யாத நிலையில் கூட, கழிவுநீர் ஊற்று எடுத்து சாலையில் தேங்கி நிற்கிறது. மக்களால் நடந்து செல்ல முடியவில்லை. இரவு நேரங்களில் டூவீலர்களில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர். இங்கு முறையாக வடிகால் வசதி ஏற்படுத்தினால், சாலையில் தண்ணீர் தேங்காது.