/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வேளாண் கல்வி சுற்றுலாசென்ற பள்ளி மாணவர்கள் வேளாண் கல்வி சுற்றுலாசென்ற பள்ளி மாணவர்கள்
வேளாண் கல்வி சுற்றுலாசென்ற பள்ளி மாணவர்கள்
வேளாண் கல்வி சுற்றுலாசென்ற பள்ளி மாணவர்கள்
வேளாண் கல்வி சுற்றுலாசென்ற பள்ளி மாணவர்கள்
ADDED : செப் 12, 2025 01:21 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி வட்டார வேளாண்மை துறையின் கீழ், உயிர்ம வேளாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து, அட்மா திட்டத்தின் கீழ் அரவக்குறிச்சி மற்றும் ஈசநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த, 100 மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.
ஆத்மா திட்டத்தில் இயற்கை வேளாண்மை குறித்து, பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்வி சுற்றுலா கடவூர் வட்டாரத்தில் உள்ள வானகம் நம்மாழ்வார் உயிர்ம நடுவம் வளாகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அரவக்குறிச்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், ஈசநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சுற்றுலாவில் கலந்து கொண்டனர். வேளாண்மை துணை இயக்குனர் லீலாவதி, மாணவர்களுக்கு விளக்க உரை வழங்கினார். இயற்கை வேளாண்மை குறித்த தொழில் நுட்பங்கள், அதன் முக்கியத்துவங்கள் குறித்து வானகத்தின் அறங்காவலர் ரமேஷ் பேசினார்.
ஊட்டமேற்றிய தொழு உரம் தயாரிக்கும் முறைகள், மண்புழு உரம் தயாரிக்கும் முறை, பஞ்சகாவியா, மீன் அமிலம், இஞ்சி பூண்டு கரைசல், அசோலா வளர்ப்பு முறைகள், இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் முறைகள் குறித்து, விளக்கம் தரப்பட்டது. ஏற்பாடுகளை, வட்டார தொழில்நுட்ப மேலாளர் சோனியா, உதவி தொழில்நுட்ப மேலாளர் பிரபாகரன் மற்றும் மதன்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.