Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மத்திய அரசு நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

மத்திய அரசு நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

மத்திய அரசு நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

மத்திய அரசு நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

ADDED : செப் 05, 2025 01:02 AM


Google News
கரூர், மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் படிக்கும், பிற்படுத்தப்பட்டோர் மாணவ, மாணவியர் கல்வி உதவி பெற விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள, பட்டியலிட்ட மத்திய அரசு கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக் கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அவர்களின், குடும்ப ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆண்டுக்கு அதிகபட்சம், 2 லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படும். 2025--26ம் கல்வியாண்டில் புதியது மற்றும் புதுப்பிக்க விண்ணப்பிவர்கள், அதற்குரிய உரிய அலுவலகம் அல்லது https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அக்., 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us