ADDED : ஜூன் 10, 2025 12:54 AM
கரூர், சின்னதாராபுரம் அருகே, மாட்டு வண்டியில் மணல் கடத்திய ஒருவரை போலீசார் கைது செய்தனர்.கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் போலீஸ் எஸ்.ஐ., சரவணன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் பள்ளப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, மாட்டு வண்டியில், ஆற்று மணல் கடத்தி வந்த விஸ்வநாதபுரியை சேர்ந்த ராஜா, 41, என்பவரை சின்னதாராபுரம் போலீசார் கைது செய்தனர். மேலும், மாட்டு வண்டியும், மணலும் பறிமுதல் செய்யப்பட்டது.