Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மை விற்பனை ஜோர்

நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மை விற்பனை ஜோர்

நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மை விற்பனை ஜோர்

நவராத்திரி விழாவை முன்னிட்டு கொலு பொம்மை விற்பனை ஜோர்

ADDED : செப் 12, 2025 02:09 AM


Google News
கரூர், நவராத்திரி விழாவுக்காக, கொலு பொம்மைகள் விற்பனை கரூரில் தொடங்கியுள்ளது.

இந்துக்கள் கொண்டாடும் பண்டிகைகளில், முக்கியமானது நவராத்திரி விழாவாகும். நவராத்திரி விழா என்பது, மக்களை துன்புறுத்தி வந்த மகிசாசுரன் என்ற அரக்கனுடன், ஆதிபராசக்தி 9 நாட்கள் போரிட்டு, 10வது நாளில் அசுரனை வதம் செய்தார். இந்த வெற்றி கொண்ட நிகழ்வு, நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்கள், வீடுகளில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்படுகிறது.

கொலுவில் கடவுள் பொம்மைகள், விலங்கினம், இயற்கை காட்சிகள், தெய்வீக பொருட்கள் உள்பட பலவகையான பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும். ஒவ்வொரு நாளும் இரவு பூஜை செய்து வழிபாடு நடத்தப்படும். துர்கா தேவி, மகாலட்சுமி, சரஸ்வதி ஆகிய முப்பெரும் தேவிகளின் வழிபாடாக இருக்கும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழா வரும், 22ல் தொடங்குகிறது. அக்.,1 ஆயுத பூஜை, அக்.,2 விஜயதசமி பண்டிகையாகும். நவராத்திரி விழாவையொட்டி, கரூரில் கொலு பொம்மைகள் விற்பனைக்காக வந்துள்ளன.

கரூரில், கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் அருகே உள்ள, ஐயப்பா சேவா சங்கம் மண்டபத்தில் கொலு பொம்மைகள் விற்பனைக்காக வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. பொம்மைகள், 200 முதல் 3,000 ரூபாய் வரையும், இதுதவிர செட் பொம்மைகளும் விற்கப்படுகிறது. கொலு வைத்து வழிபாடு நடத்தக்கூடியவர்கள், தற்போதே பொம்மைகளை வாங்க தொடங்கி விட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us