Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மழை காலங்களில் பாதுகாப்பு அவசியம்: மின்வாரியம் அறிவுரை

மழை காலங்களில் பாதுகாப்பு அவசியம்: மின்வாரியம் அறிவுரை

மழை காலங்களில் பாதுகாப்பு அவசியம்: மின்வாரியம் அறிவுரை

மழை காலங்களில் பாதுகாப்பு அவசியம்: மின்வாரியம் அறிவுரை

ADDED : அக் 22, 2025 01:37 AM


Google News
கரூர், மழைக்காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாது-காப்பு நடைமுறைகள் குறித்து கரூர் மின்வாரியம் அறிவுரை- வழங்கியுள்ளது.

இதுகுறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பு: கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஈர-மான கைகளால் மின்சார சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம். வீட்டில் மின் சுவிட்சுகளை, 'ஆன்' செய்யும் போது கவனத்துடன் இயக்கவும். வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்க கூடாது.

நீரில் நனைந்த பேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்த-வுடன் இயக்க வேண்டாம். மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்க கூடாது. வீட்டில் மின்-சாரம் இல்லையென்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுக்க வேண்டாம்.

மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின்சார கேபிள்கள், மின்சார கம்பங்கள், பில்லர்பாக்ஸ், டிரான்ஸ்பார்மர்கள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வது தவிர்க்கப்பட வேண்டும். வீடுகள் மற்றும் கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவர்களில் கை வைப்பதை தவிர்க்க வேண்டும். சாலைகளிலும், தெருக்க-ளிலும் மின்கம்பங்கள், மின் சாதனங்களுக்கு அருகே தேங்கி கிடக்கும் தண்ணீரில் நடப்பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ, வாகனத்தில் செல்வதோ தவிர்க்கப்பட வேண்டும்.

தாழ்வாக தொங்கி கொண்டிருக்கும் மின்சார ஒயர்கள் அருகில் செல்வதையும், தொடுவதையும் தவிர்க்க வேண்டும். மின்சார கம்-பத்திலோ அல்லது அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டே ஒயரின் மீதோ கொடி கயிறு கட்டி துணி காய வைக்க வேண்டாம். மின் கம்பத்திலோ அல்லது அவற்றை தாங்கும் கம்பங்களிலோ கால்ந-டைகளை கட்டி வைக்க வேண்டாம். மின் சேவைகள், மின் கம்பி அறுந்து தொங்கி கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந் தாலோ மற்றும் மின் தடை குறித்த புகார்களுக்கு உடனடியாக, 24 மணி நேரமும் செயல்-படும் மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை, 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு, அதில், கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us