/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தொழில் முன்னோடி திட்டத்துக்கு ரூ.8.32 கோடி மானியம்: கலெக்டர் தொழில் முன்னோடி திட்டத்துக்கு ரூ.8.32 கோடி மானியம்: கலெக்டர்
தொழில் முன்னோடி திட்டத்துக்கு ரூ.8.32 கோடி மானியம்: கலெக்டர்
தொழில் முன்னோடி திட்டத்துக்கு ரூ.8.32 கோடி மானியம்: கலெக்டர்
தொழில் முன்னோடி திட்டத்துக்கு ரூ.8.32 கோடி மானியம்: கலெக்டர்
ADDED : ஜூன் 28, 2025 04:22 AM
கரூர்: அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், 8.32 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.
கரூர் மாவட்டம், உப்பிடமங்கலத்தில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ், இயங்கி வரும் தொழில் நிறுவனத்தில் நேற்று, கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் ஆதிதிராவிடர், பழங்குடியினரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் உற்பத்தி சேவை மற்றும் வணிகம் சார்ந்த தொழில்திட்டங்களுக்கு மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளில் இந்த திட்டத்தின் கீழ், 64 தொழில் முன்னோடிகளுக்கு, 8.32 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
மாவட்ட மேலாளர் ரமேஷ், உதவி பொறியாளர் மனோஜ் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.