Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 5,116 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு ரூ.44.05 கோடி வழங்கல்; கலெக்டர்

5,116 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு ரூ.44.05 கோடி வழங்கல்; கலெக்டர்

5,116 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு ரூ.44.05 கோடி வழங்கல்; கலெக்டர்

5,116 மகளிர் குழு உறுப்பினர்களுக்கு ரூ.44.05 கோடி வழங்கல்; கலெக்டர்

ADDED : ஜூன் 12, 2025 01:23 AM


Google News
கரூர், ''மாவட்டத்தில், 455 மகளிர் சுயஉதவிக்குழுவை சார்ந்த, 5,116 உறுப்பினர்களுக்கு, 44.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வங்கி கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன,'' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், செல்லாண்டிபட்டியில், சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை, கலெக்டர் தங்கவேல் வழங்கினார். பின் அவர் கூறியதாவது:

கரூர் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக, 317 மகளிர் சுயஉதவிக் குழுவை சேர்ந்த, 3,598 உறுப்பினர்களுக்கு, 30.49 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வங்கி கடனுதவி, 46 நபர்களுக்கு, 23 லட்சம் ரூபாய் மதிப்பில் வட்டார வணிக வள மைய கடனுதவி, 18 உறுப்பினர்களுக்கு, 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சிறு தொழில் கடனுதவி உள்பட மொத்தம், 455 மகளிர் சுயஉதவிக்குழுவை சார்ந்த, 5,116 உறுப்பினர்களுக்கு, 44.05 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கூறினார்.

நிகழ்ச்சியில், கரூர் எம்.பி., ஜோதிமணி, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, மேயர் கவிதா, மகளிர் திட்ட இயக்குனர் பாபு, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் வசந்த்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us