/உள்ளூர் செய்திகள்/கரூர்/ 732 பயனாளிகளுக்கு ரூ.12.31 கோடி தாட்கோ மானியம் வழங்கல்: கலெக்டர் 732 பயனாளிகளுக்கு ரூ.12.31 கோடி தாட்கோ மானியம் வழங்கல்: கலெக்டர்
732 பயனாளிகளுக்கு ரூ.12.31 கோடி தாட்கோ மானியம் வழங்கல்: கலெக்டர்
732 பயனாளிகளுக்கு ரூ.12.31 கோடி தாட்கோ மானியம் வழங்கல்: கலெக்டர்
732 பயனாளிகளுக்கு ரூ.12.31 கோடி தாட்கோ மானியம் வழங்கல்: கலெக்டர்
ADDED : செப் 24, 2025 01:33 AM
கரூர், தாட்கோ மூலம், நான்காண்டுகளில், 732 பயனாளிகளுக்கு, 12.31 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: கரூர் மாவட்டத்தில், 'தாட்கோ' மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி
யினருக்கு தொழில் முனைவு திட்டம், நண்ணிலம் மகளிர் நில உடமை திட்டம், சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவி திட்டம், கல்வி கடன் திட்டம் உள்பட பல்வேறு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இங்கு, தொழில் முனைவோர் திட்டத்தில், 470 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு, 15.13 கோடி ரூபாய் வங்கி கடனில், 4.55 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.மகளிர் சுய உதவி குழுக்களுக்கான பொருளாதார கடன் உதவி திட்டம் மூலம், 170 ஆதிதிராவிடர் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 19.90 கோடி ரூபாய் வங்கி கடனுக்கு, 5.97 கோடி ரூபாய் மானியமாகவும், நண்ணிலம் மகளிர் நில உடமை திட்டத்தின் கீழ், 36 மகளிர்களுக்கு, 7.16 கோடி வங்கி கடனுக்கு, 1.79 கோடி ரூபாய் மானியம், 25.50 ஏக்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம், 56 ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு, 30 லட்சம் ரூபாய் மானியம் என மொத்தம், நான்காண்டுகளில், 732 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு, 43.19 கோடி ரூபாய் வங்கி கடன்களுக்கு, 12.31 கோடி ரூபாய் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.