/உள்ளூர் செய்திகள்/கரூர்/ நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை
நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை
நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை
நச்சுப்புகை வெளியிடும் வாகனங்கள் அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை
ADDED : மே 12, 2025 03:23 AM
கரூர்: கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் நச்சுப்புகை வெளி-யிடும் வாகனங்களை, அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில், க.பரமத்தி வழியாக கோவை மற்றும் திருப்பூருக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. கரும்
புகையை கக்கும் வாகனங்களை, பின் தொடர்ந்து செல்லும் வாகன ஓட்டிகள் கரும்புகையால் நுரையீரல் பாதிப்புக்குள்ளாகி, இளைப்பு நோயால் அவதிப்படுகின்றனர்.
மோட்டார் வாகன சட்டப்படி, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாத வாகனங்களை மட்டும் இயக்க வேண்டும். இதற்காக பழைய மோட்டார் வாகனங்களை, மாசு கட்டுப்பாடு வாரியத்தின் அங்கீ-காரம் பெற்ற நிறுவனத்திடம் சான்று பெற்ற, வாகனங்களை மட்-டுமே இயக்க வேண்டும். வட்டார போக்கு
வரத்து அதிகாரிகள், கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.


