/உள்ளூர் செய்திகள்/கரூர்/க.பரமத்தி அருகே அமராவதி ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம்க.பரமத்தி அருகே அமராவதி ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம்
க.பரமத்தி அருகே அமராவதி ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம்
க.பரமத்தி அருகே அமராவதி ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம்
க.பரமத்தி அருகே அமராவதி ஆற்றில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூலை 05, 2024 12:55 AM
கரூர்: க.பரமத்தி அருகே அமராவதி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்-பட்டன.
கரூர் மாவட்டம் க. பரமத்தி அருகே கோடந்துார் பஞ்., மூலது-றையில் அமராவதி ஆற்றங்கரையில் நீண்ட நாட்களாக ஆக்கிர-மிப்பு இருந்து வருகிறது. அரசு அனுமதியின்றி ஆற்றின் மையப் பகுதியில் வட்ட கிணறு அமைத்து சிமெண்ட் கட்டடம் கட்டி ஆக்கிரமிப்பு செய்து, கிணற்றில் இருந்து ராட்சச மோட்டார் உத-வியுடன் தண்ணீர் எடுத்து விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர்.சட்ட விரோதமாக தண்ணீர் எடுப்பதை தடுத்து, ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என, காங்., மாவட்ட பொருளார் மெய்ஞான-மூர்த்தி, உயர் நீதிமன்றம் மதுரை கிளையில், 2021ல் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆக்கிரமிப்பை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்-டது. தொடர்ந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மீண்டும் ஆக்கிர-மிப்பு செய்யப்பட்டு, சட்ட விரோதமாக தண்ணீர் எடுக்கப்பட்-டதால், மெய்ஞானமூர்த்தி உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். 2024 பிப்., ஆக்கிர-மிப்பு அகற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, நீர்வளத்துறை உதவி பொறியாளர் ஸ்டாலின் சுப்-பையன் தலைமையில், அமராவதி ஆற்றில், ஒன்பது இடங்களில் ராட்சச மோட்டார்கள் மற்றும் பைப் லைன் உள்பட ஆக்கிரமிப்-புகளை நேற்று அகற்றினர். நெடுஞ்சாலை துறை கோட்ட உதவி பொறியாளர் அழகர்சாமி தலைமையில், சாலை ஓரமாக, 2 கி.மீ., செல்லும் பைப்லைன்களை நெடுஞ்சாலைத்துறை உதவியுடன் அகற்றினர்.