/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூர் மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீர் கூட்டம் கரூர் மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்
கரூர் மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்
கரூர் மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்
கரூர் மாவட்டத்தில் நாளை ரேஷன் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூன் 13, 2025 01:54 AM
கரூர், கரூர் மாவட்டத்தில், நாளை ரேஷன் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
கரூர் மாவட்டத்தில் நாளை (14ம் தேதி) காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணி வரை ரேஷன் குறைதீர் முகாம் நடக்கிறது. கரூர், அரவக்குறிச்சி, மண்மங்கலம், புகழூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர் வட்ட வழங்கல் அலுவலகங்களில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில் குறைதீர் கூட்டம் நடக்கிறது.
பொது வினியோக திட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய ரேஷன் கார்டு கோருதல், மொபைல் எண் பதிவு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசிய பொருட்களின் தரம் குறித்த புகார்களை தெரிவிக்-கலாம்.இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.