ADDED : ஜூலை 15, 2024 01:02 AM
கரூர்: கரூர், ஐந்து சாலை பகுதி வழியாக நெரூர், வாங்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு, பஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.
அந்த சாலையில், ஏராளமான வீடுகளும் உள்ளன. அரசு தொடக்கப்பள்ளி ஒன்றும் செயல்படுகிறது. ஆனால், அப்ப-குதியில் போதிய வடிகால் வசதி இல்லாததால், மழை பெய்யும் தண்ணீர், ரயில்வே மேம்பாலம் கீழ் பகுதியில் தேங்கி நிற்கிறது. இதனால், ஐந்து சாலை வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மழைநீர் தேங்கி நிற்கும் போது, பொதுமக்களால் நடந்து கூட செல்ல முடியவில்லை. இதனால், கரூர் ஐந்து சாலை பகுதியில், மழைநீர் செல்லும் வகையில் வடிகால் வசதி அமைக்க வேண்டும்.