Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மழை

ADDED : செப் 18, 2025 01:56 AM


Google News
ஈரோடு, ஈரோட்டில், நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. மாலை 3:00 மணிக்கு வானத்தில் கருமேகம் சூழ்ந்து, பலத்த காற்றுடன் மிதமான வேகத்தில் மழை பெய்ய ஆரம்பித்தது. 3:15 மணிக்கு இடி, மின்னலுடன் கன மழை வெளுத்து வாங்கியது. வெட்டுக்காட்டுவலசு, மாணிக்கம்பாளையம், வீரப்பன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்தது. அதேசமயம், பன்னீர்செல்வம் பார்க், பஸ் ஸ்டாண்டு உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. 4:00 மணிக்கு அனைத்து பகுதிகளிலும் மழை நின்றது

. தொடர்ச்சியாக குளிர்காற்று வீசியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.* கோபியில் மதியம் 2:30 மணிக்கு புதுப்பாளையம், கரட்டூர், மொடச்சூர், குள்ளம்பாளையம், நாதிபாளையம், பா.வெள்ளாளபாளையம், கூகலுார், பாரியூர், பொலவக்காளிபாளையம், தாசம்பாளையம், ஐய்யம்பாளையம், கவுந்தப்பாடி, சலங்கபாளையம் உள்ளிட்ட பகுதியில், இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. 3:30 மணி வரை பெய்த மழையால், விவசாய நிலங்களில் ஆங்காங்கே குட்டையாக மழைநீர் தேங்கி நின்றது.

* அந்தியூர், தவிட்டுப்பாளையம், புது மேட்டூர், தாசாரியூர், அண்ணாமடுவு, ஊஞ்சக்காடு, கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட இடங்களில், நேற்று மதியம் 3:00 மணியிலிருந்து, அரை மணி நேரத்துக்கும் மேலாக மிதமான மழை பெய்தது.

இதேபோல், வெள்ளித்திருப்பூர், குண்டாந்தோட்டம், ரெட்டியபாளையம், மாத்துார், ஆலாம்பாளையம், எண்ணமங்கலம் சுற்று வட்டார பகுதியில், ஒரு மணி நேரம் மிதமான மழை பெய்தது. மேலும் சென்னம்பட்டி, ஜரத்தல், முரளி, குருவரெட்டியூர், கிட்டம்பட்டி, சனிசந்தை பகுதியில் பகல், 1:00 மணியிலிருந்து 2:00 மணி வரை மழை பெய்தது.* பெருந்துறையில் மதியம், 3:30 மணியளவில் பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. 4:30 மணி வரை மழை நீடித்தது. இதேபோல் பவானி பகுதியிலும் மழை பெய்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us