/உள்ளூர் செய்திகள்/கரூர்/கரூரில் மழை; குளிர்ந்த காற்றால் மக்கள் நிம்மதிகரூரில் மழை; குளிர்ந்த காற்றால் மக்கள் நிம்மதி
கரூரில் மழை; குளிர்ந்த காற்றால் மக்கள் நிம்மதி
கரூரில் மழை; குளிர்ந்த காற்றால் மக்கள் நிம்மதி
கரூரில் மழை; குளிர்ந்த காற்றால் மக்கள் நிம்மதி
ADDED : ஜூன் 02, 2024 07:23 AM
கரூர் : கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது.
தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில், மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வரும், 6 வரை மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் நேற்று முன்தினம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், நேற்று மாலை, 4:00 மணி முதல், 4:30 மணி வரை கரூர் நகர், திருகாம்புலியூர், பசுபதிபாளையம், வெங்கமேடு, தான்தோன்றிமலை, திருமாநிலையூர், புலியூர், வெண்ணைமலை, தொழிற்பேட்டை, கொளந்தானுார், அரசு காலனி, காந்தி கிராமம், ராமானுார், சுக்காலியூர், செல்லாண்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், இடியுடன் கூடிய மழை பெய்தது.
கடந்த, இரண்டு நாட்களாக வெயிலின் தாக்கம் கரூர் மாவட்டத்தில் குறையவில்லை. நேற்று மாலை இடியுடன் கூடிய பெய்த மழையுடன், குளிர்ந்த காற்று வீசியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.