/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வாழ்நாள் சான்று சமர்பிக்க வேணும்மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வாழ்நாள் சான்று சமர்பிக்க வேணும்
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வாழ்நாள் சான்று சமர்பிக்க வேணும்
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வாழ்நாள் சான்று சமர்பிக்க வேணும்
மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை வாழ்நாள் சான்று சமர்பிக்க வேணும்
ADDED : ஜூன் 13, 2024 06:51 AM
கரூர் : மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகை பெற, வாழ்நாள் சான்று ஜூன், 28க்குள் சமர்பிக்க வேண்டும் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கரூர் மாவட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் மூலமாக மாதந்தோறும், 2,000 ரூபாய் -பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கு, வி.ஏ.ஓ., வாழ்நாள் சான்று பெற்று ஜூன், 28க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அத்துடன், தேசிய அடையாள அட்டை நகல், தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் போட்டோ இணைக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு தொலைபேசி எண்ணான, 04324 -257130ல், தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.