/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மனு அளித்த மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல் மனு அளித்த மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்
மனு அளித்த மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்
மனு அளித்த மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்
மனு அளித்த மக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்
ADDED : மே 30, 2025 01:17 AM
குளித்தலை,குளித்தலை தாலுகா அலுவலகத்தில், நேற்று குறு வட்ட வருவாய் கிராமங்களுக்கான ஜமாபந்தி நடைபெற்றது.சிறப்பு அலுவலரான சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ தலைமை வகித்தார். இவரது நேர்முக உதவியாளர் மகுடேஸ்வரன், தாசில்தார் இந்துமதி, தனி தாசில்தார் மகாமுனி, வெங்கடேசன், துணை தாசில்தார் நீதிராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.
ஏராளமான பொதுமக்கள், சப்-கலெக்டரிடம் மனுக்களை அளித்தனர். ஆர்.ஐ.. தமிழரசி மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். மனுக்கள் கொடுத்த மக்களுக்கு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.