/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஜூன் 28, 2025 07:52 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், குளித்தலை வள்ளலார் வாழ்வியல் மையம் சார்பில், பெற்றோர்களை இழந்த மாணவ, மாணவியருக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
வள்ளலார் வாழ்வியல் மைய தலைவர் மகாமுனி மாணவ, மாணவியருக்கு இலவசமாக நோட்டு, புத்தகம், பேனா மற்றும் இதர கல்வி உபகரணங்களை வழங்கினார். தலைமை ஆசிரியர் பெரியசாமி, துணை தலைமை ஆசிரியர் ராஜசேகரன், தமிழ் ஆசிரியர் மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள் லதா, பானுமதி, சிறப்பு ஆசிரியர் மணிமேகலை, மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.