Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ கரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

கரூரில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

ADDED : செப் 18, 2025 01:29 AM


Google News
கரூர் கரூரில் தனியார் நிறுவனங்களின் சார்பில், நாளை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

அவர், வெளியிட்ட அறிக்கை:கரூர் வெண்ணைமலையில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், நாளை (19ம் தேதி) காலை 10:00 முதல் மதியம், 2:00 மணி தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதில், 25க்கும் மேற்பட்ட தனியார் துறை வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று, 200க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்பவுள்ளனர். முகாமில், 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., மற்றும் பொறியியல் பட்டதாரிகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.

மாவட்டத்தை சேர்ந்த, வேலை தேடும் இளைஞர்கள் தங்களுடைய சுயவிபர குறிப்பு, உரிய கல்விச்சான்று, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்கலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிப்போர் மற்றும் வேலை தேடும் இளைஞர்கள், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். விபரங்களுக்கு, 04324-223555, 93452 61136 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us