/உள்ளூர் செய்திகள்/கரூர்/ முகூர்த்த சீசன் காரணமாகவாழைத்தார் விலை உயர்வு முகூர்த்த சீசன் காரணமாகவாழைத்தார் விலை உயர்வு
முகூர்த்த சீசன் காரணமாகவாழைத்தார் விலை உயர்வு
முகூர்த்த சீசன் காரணமாகவாழைத்தார் விலை உயர்வு
முகூர்த்த சீசன் காரணமாகவாழைத்தார் விலை உயர்வு
ADDED : செப் 01, 2025 02:15 AM
கிருஷ்ணராயபுரம்;கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரன்பட்டி, மகாதானபுரம், கள்ளப்பள்ளி, கருப்பத்துார், பொய்கைப்புத்துார் பகுதிகளில், வாழை சாகுபடி அதிகளவில் நடக்கிறது.
இங்கு, ரஸ்தாளி, பூவன், கற்பூரவள்ளி ரக வாழை அதிகளவில் பயிரிடப்படுகிறது. விளைந்த வாழைத்தார்களை அறுவடை செய்து, லாலாப்பேட்டை வாழைக்காய் ஏல கமிஷன் மண்டிக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர்.
அதன்படி, நேற்று நடந்த ஏலத்தில், பூவன் வாழைத்தார் ஒன்று, 350 ரூபாய், கற்பூரவள்ளி, 250 ரூபாய், ரஸ்தாளி, 400 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டது. முகூர்த்த சீசன் காரணமாக, கடந்த வாரத்தை விட வாழைத்தார் ஒன்றுக்கு, 50 ரூபாய் வரை விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர்.