/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அன்புமணி வெளியிட்ட புத்தகம் மாஜி அமைச்சரிடம் வழங்கல் அன்புமணி வெளியிட்ட புத்தகம் மாஜி அமைச்சரிடம் வழங்கல்
அன்புமணி வெளியிட்ட புத்தகம் மாஜி அமைச்சரிடம் வழங்கல்
அன்புமணி வெளியிட்ட புத்தகம் மாஜி அமைச்சரிடம் வழங்கல்
அன்புமணி வெளியிட்ட புத்தகம் மாஜி அமைச்சரிடம் வழங்கல்
ADDED : செப் 10, 2025 01:19 AM
கரூர், பா.மக., மாநில தலைவர் அன்புமணி வெளியிட்ட புத்தகத்தை, பா.ம.க., நிர்வாகிகள், கரூரில் முன்னாள் அமைச்சரிடம் வழங்கினர்.
தி.மு.க., சார்பில் கடந்த, 2021ல், வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை தொடர்பாக, சமீபத்தில் பா.ம.க., மாநில தலைவர் அன்புமணி, விடியல் எங்கே என்ற தலைப்பில் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். அதை, பா.ம.க., நிர்வாகிகள், எதிர்க்கட்சி நிர்வாகிகளுக்கு வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று கரூர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில், மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கரை சந்தித்து, கரூர் மேற்கு மாவட்ட பா.ம.க., செயலர் சுரேஷ், விடியல் எங்கே என்ற புத்தகத்தை வழங்கினார். அ.தி.மு.க.,-பா.ம.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.