சாலையில் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி
சாலையில் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி
சாலையில் பள்ளம்: வாகன ஓட்டிகள் அவதி
ADDED : மே 24, 2025 01:40 AM
கரூர், மே 24
கரூர் டவுன் பழைய அரசு மருத்துவமனை சாலையில், பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள்
அவதிப்படுகின்றனர்.
கரூர் டவுன் பழைய அரசு மருத்துவமனை சாலையில், நீர்வளத்துறை அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், மாநகராட்சி ஆண்கள் மேல்
நிலைப்பள்ளி, தனியார் கல்லுாரி செயல்
படுகிறது.
இதை தவிர, அரசு மருத்துவமனை சாலையில், வணிக நிறுவனங்களும்
உள்ளன. தற்போது, பழைய அரசு மருத்துவமனையில், சித்தா பிரிவு, ஆயுர்வேத சிகிச்சை, இயற்கை மருத்துவ பிரிவுகள் செயல்படுகின்றன. பழைய அரசு மருத்துவமனை சாலையில், ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்நிலையில், சாலையில் பல நாட்களுக்கு முன் ஏற்பட்ட பள்ளம், மூடப்படாமல் உள்ளது. இதனால், இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள்,
தடுமாறி கீழே விழுகின்றனர். எனவே, சாலையில் உள்ள, பள்ளத்தை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.