/உள்ளூர் செய்திகள்/கரூர்/ தம்பதியர் மீது போதையில் தாக்குதல் டிரைவரை கைது செய்த போலீஸ் தம்பதியர் மீது போதையில் தாக்குதல் டிரைவரை கைது செய்த போலீஸ்
தம்பதியர் மீது போதையில் தாக்குதல் டிரைவரை கைது செய்த போலீஸ்
தம்பதியர் மீது போதையில் தாக்குதல் டிரைவரை கைது செய்த போலீஸ்
தம்பதியர் மீது போதையில் தாக்குதல் டிரைவரை கைது செய்த போலீஸ்
ADDED : செப் 04, 2025 01:32 AM
கரூர், கணவன், மனைவி மீது குடிபோதையில் தாக்குதல் நடத்திய, சரக்கு ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரசாத், 34, இவரது மனைவி ஹேமலதா, 30. இவர்கள் புன்னம் பசுபதிபாளையத்தில், அட்டை தயாரிக்கும் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த கலந்தர் நைனா, 30. இவரும் பசுபதிபாளையத்தில் செயல்பட்டு வரும், ஒரு தனியார் அட்டை தயாரிக்கும் கம்பெனியில் சரக்கு ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் பிரசாத் அட்டை கம்பெனியில், வேலை பார்ப்பவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மது போதையில் வந்த கலந்தர் நைனா, பிரசாத்தை பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி, கீழே கிடந்த கல்லை எடுத்து தலையில் தாக்கியுள்ளார். அவரது மனைவி ஹேமலதா தடுத்துள்ளார். அப்போது ஹேமலதாவை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார். இதனால் கணவன், மனைவி இருவரும் பலத்த காயமடைந்தனர். இரண்டு பேரும், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி, கலந்தர் நைனாவை கைது செய்தனர்.