/உள்ளூர் செய்திகள்/கரூர்/போராட்டம் நடத்த அனுமதி கோரி பஞ்., உறுப்பினர் கலெக்டரிடம் மனுபோராட்டம் நடத்த அனுமதி கோரி பஞ்., உறுப்பினர் கலெக்டரிடம் மனு
போராட்டம் நடத்த அனுமதி கோரி பஞ்., உறுப்பினர் கலெக்டரிடம் மனு
போராட்டம் நடத்த அனுமதி கோரி பஞ்., உறுப்பினர் கலெக்டரிடம் மனு
போராட்டம் நடத்த அனுமதி கோரி பஞ்., உறுப்பினர் கலெக்டரிடம் மனு
ADDED : ஜூலை 09, 2024 05:38 AM
கரூர்: குடிநீர் வினியோகம் கோரி மனு அளித்து நடவடிக்கையில்லை என்பதால், போராட்டம் நடத்த அனுமதி கோரி கரூர் வெள்ளியணை பஞ்., 11வது வார்டு உறுப்பினர் கனகராஜ், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தார்.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம். வெள்ளியணை பஞ்.,க்குட்பட்ட ஓந்தாம்பட்டியில், 150 குடும்பங்களுக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். கடந்த இரு மாதங்களாக, காவேரி கூட்டு குடிநீர் சரியாக வருவதில்லை. இது குறித்து அதிகாரிகளிடமும், பஞ்., தலைவர், முதல்வர் தனிப்பிரிவிற்கும் என பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவிரி கூட்டு குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்காததால், போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.