/உள்ளூர் செய்திகள்/கரூர்/ அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்க கோரி மனு அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்க கோரி மனு
அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்க கோரி மனு
அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்க கோரி மனு
அரசுக்கு சொந்தமான நிலத்தை மீட்க கோரி மனு
ADDED : மே 30, 2025 01:18 AM
அரவக்குறிச்சி ;அரவக்குறிச்சி அருகே உள்ள, லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி புத்துார் நத்தம் பகுதியில், அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தை மீட்க, ஜமாபந்தி நிகழ்வில் ஆர்.டி.ஓ., முகமது பைசூலிடம் மனு அளிக்கப்பட்டது.
அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி அடுத்த லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி, புத்துார் நத்தம் பகுதியில் உள்ள சர்வே எண் 527, 528, 523 ஆகியவை அரசுக்கு சொந்தமான நிலங்கள். ஒரு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த நிலத்தை, சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். ஆக்கிரமிப்பு செய்துள்ளதை அகற்றி, அரசு கையகப்படுத்த வேண்டி
லிங்கமநாயக்கன்பட்டி ஊராட்சி மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஊராட்சி தலைவர் மற்றும் சமூக ஆர்வலர்களால் கடந்தாண்டு ஜமாபந்தி நிகழ்ச்சியில் மனு அளித்துள்ளனர்.
ஓராண்டாகியும் மனு மீது நடவடிக்கை எடுக்காததால், தற்போது சமூக ஆர்வலர்கள், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில், 20க்கும் மேற்பட்டோர் ஆர்.டி.ஓ.,விடம் அளித்தனர்.