/உள்ளூர் செய்திகள்/கரூர்/தெரு நாய்களை விஷம் வைத்து கொல்லும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனுதெரு நாய்களை விஷம் வைத்து கொல்லும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
தெரு நாய்களை விஷம் வைத்து கொல்லும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
தெரு நாய்களை விஷம் வைத்து கொல்லும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
தெரு நாய்களை விஷம் வைத்து கொல்லும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு
ADDED : ஜூலை 01, 2025 01:03 AM
கரூர், தெரு நாய்கள் உள்பட வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிகளை, விஷம் வைத்து கொல்லும் நபர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கரூர், வாங்கப்பாளையத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் சுப்பிரமணி, கரூர் கலெக்டர் அலுவலக குறைதீர் கூட்டத்தில் மனு அளித்துள்ளார். அதில், கூறியிருப்பதாவது:
கரூர் அருகில் வாங்கப்பாளையம் பகுதியில் அடிக்கடி தெரு நாய்கள், பூனைகள், புறா போன்ற பறவைகள் இறந்து கிடக்கின்றன. வைரஸ் போன்ற நோய் கிருமி தாக்குதலால், இறந்து விடுவதாக முதலில் கருதினேன். இது குறித்து விசாரணை நடத்தியபோது, விஷ மருந்து வைத்து நாய்களை கொலை செய்வது தெரியவந்தது. அங்குள்ள நபர் ஒருவர், விஷ மருந்து ஸ்பிரே அடிப்பதால், நாய் உள்பட வீட்டு வளர்ப்பு பிராணிகள் இறந்து விடுகின்றன. இப்பகுதியில், கால்நடை டாக்டர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு, வீட்டு பிராணிகள் உயிரிழப்புக்கு காரணமானவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.