/உள்ளூர் செய்திகள்/கரூர்/குடிநீர் வினியோகம் செய்ய கோரி நொய்யல் குறுக்கு சாலை மக்கள் மனுகுடிநீர் வினியோகம் செய்ய கோரி நொய்யல் குறுக்கு சாலை மக்கள் மனு
குடிநீர் வினியோகம் செய்ய கோரி நொய்யல் குறுக்கு சாலை மக்கள் மனு
குடிநீர் வினியோகம் செய்ய கோரி நொய்யல் குறுக்கு சாலை மக்கள் மனு
குடிநீர் வினியோகம் செய்ய கோரி நொய்யல் குறுக்கு சாலை மக்கள் மனு
ADDED : ஜூலை 09, 2024 05:44 AM
கரூர்: குடிநீர் விநியோகம் செய்ய கோரி, கரூர் வேட்டமங்கலம் அருகில், நொய்யல் குறுக்கு சாலையை சேர்ந்த லோகநாதன் என்பவர் தலைமையில், பொதுமக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
அதில், கூறியிருப்பதாவது: கரூர் மாவட்டம், நொய்யல் குறுக்குசாலை, வெள்ளியம்பாளையம், கணபதிபாளையம், அண்ணாநகர், பங்களா நகர் மற்றும் நெய்க்குப்பம் பகுதிகளில், 600 குடும்பங்களை சேர்ந்த, 1,800 பேருக்கு மேல் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில், மரவாபாளையம் காவிரி ஆற்றில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஜூன், 30ல் மின் மோட்டார் பழுதடைந்ததால் நீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. பலமுறை மோட்டார் பழுதாகி குடிநீர் வினியோகம் தடைப்பட்டு உள்ளது. குடிநீர் கிடைக்காமல் தவித்து வருகிறோம். உடனடி தீர்வாக லாரி மற்றும் டிராக்டரில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். விரைவில் மின்மோட்டாரை பழுது நீக்கி, சீரான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.