Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கரூர்/மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்: கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்: கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்: கலெக்டர் தகவல்

மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி தீவிரம்: கலெக்டர் தகவல்

ADDED : ஜன 10, 2024 11:42 AM


Google News
கரூர்: கரூர் மாவட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி, நடப்பு மாதம் முழுவதும் நடக்கிறது என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கான, சமூக தரவுகள் பதிவு இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டது. இந்த கணக்கெடுப்பு பணி, கரூர் மாவட்டத்தில் நடப்பு மாதம், முழுவதும் நடத்தப்படுகிறது. கணக்கெடுப்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க களப்பணியாளர்கள், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன களப்பணியாளர்கள், தகவல் சேகரிக்கும் பணியை மேற்கொள்கின்றனர்.

கணக்கெடுப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள செயலியில், தகவல்கள் பதிவு செய்யப்படும். மாவட்டத்தில் உள்ள, அனைத்து மாற்றுத் திறனாளிகளும், தங்கள் தகவலை தயக்கம் இல்லாமல் வழங்கலாம். நடப்பு மாதம் முழுவதும், மாற்றுத்திறனாளிகள் தங்கள் விபரங்களை சமூக தரவு தளத்தில் பதிவு செய்யலாம். மேலும், விபரங்களுக்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தை அணுகலாம். 04324-257130 என்ற தொலைபேசி எண்ணிலும், தொடர்பு கொண்டு விபரம் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us