/உள்ளூர் செய்திகள்/கரூர்/ பூங்காவை சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு பூங்காவை சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
பூங்காவை சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
பூங்காவை சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
பூங்காவை சீரமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஜூன் 07, 2025 01:26 AM
கரூர் :கரூர் அருகே பராமரிப்பு இல்லாமல் உள்ள, பூங்காவை சீரமைக்க வேண்டும்.
கரூர்-வெள்ளியணை சாலை, தான்தோன்றிமலை அரசு குடியிருப்பு வளாகத்தில், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, பல ஆண்டுகளுக்கு முன் பூங்கா அமைக்கப்பட்டது. சிறுவர், சிறுமியர் விளையாட உபகரணங்கள், உடற்பயிற்சி செய்ய சாதனங்கள் இருந்தன.
இந்நிலையில், பூங்காவில் தற்போது விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் உடைந்த நிலையில் உள்ளது. அதை, சிறுவர்களால் பயன்படுத்த முடியவில்லை. அந்த பகுதியில், வேறு பொழுது போக்குக்கான இடம் இல்லாததால், பூங்காவில் பழுதான உபகரணங்களை, உடனடியாக சரி செய்ய, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.